/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் அருகே ஏர்வால்வு சேதம்: பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீண்
/
ஓசூர் அருகே ஏர்வால்வு சேதம்: பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீண்
ஓசூர் அருகே ஏர்வால்வு சேதம்: பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீண்
ஓசூர் அருகே ஏர்வால்வு சேதம்: பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீண்
ADDED : மே 08, 2024 05:10 AM
ஓசூர் : ஓசூர் சுற்றுப்புற பகுதிகளில் கடும் வறட்சியால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், பஞ்., மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மூலம் குடியிருப்புகளுக்கு சப்ளை செய்யப்படும் போர்வெல் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் கூட்டு குடிநீரை மட்டுமே மக்கள் அதிகளவில் நம்பியுள்ளனர். ஓசூர் மாநகராட்சியிலுள்ள, 45 வார்டுகளில், 13 வார்டுகளின் குடிநீர் தேவையை ஒகேனக்கல் கூட்டு குடிநீர் தான் தீர்த்து வைக்கிறது. கோடை காலமான தற்போது, சீரான குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் அவ்வப்போது உடைந்து, அவற்றை சரி செய்யும் வரை, குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஓசூர் அச்செட்டிப்பள்ளி அருகே கெலமங்கலம் சாலையோரமுள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயின் ஏர் வால்வு சேதமானதால், நேற்று காலை, 20 நிமிடங்களுக்கு மேலாக, ஒகேனக்கல் குடிநீர் வீணாகி, பல ஆயிரம் லிட்டர் குடிநீர், சாலையில் வீணாக வழிந்தோடி தேங்கி நின்றது. இதனால், அந்த வழித்தடத்தில், ஓசூர் நகர் மற்றும் கிராம பகுதிகளுக்கு செல்லும் ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. ஏர் வால்வு சேதம் சரிசெய்யப்பட்ட பின், குடிநீர் வினியோகம் துவங்கியது. கோடை காலத்தில் மக்களுக்கு பயன்படாமல் ஒகேனக்கல் குடிநீர் வீணானது, மக்களை வேதனைக்கு உள்ளாக்கியது.

