/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அதியமான் பாலிடெக்னிக்கில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
அதியமான் பாலிடெக்னிக்கில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
அதியமான் பாலிடெக்னிக்கில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
அதியமான் பாலிடெக்னிக்கில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : ஆக 26, 2025 01:40 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) பாலாஜி பிரகாஷ் தலைமை வகித்து, முன்னாள் மாணவர்களை வரவேற்று ஆலோசனைகளை வழங்கினார். மேலும், தற்போது கல்லுாரியில் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் சலுகைகள், வேலைவாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள், தங்களது கல்லுாரி நினைவுகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர். குழு புகைப்படம் எடுத்தனர்.
இயந்திரவியல் துறை தலைவர் புவியரசு, தொழில் முனைவோர் கருத்தரங்க குழுவினர்கள் சரளா, விஜயலட்சுமி, ஜஸ்டினா, முன்னாள் மாணவர் ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.