/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
25 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
25 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
25 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
25 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : மே 20, 2024 02:36 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், நெடுங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1998 - 99ம் ஆண்டு, 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. இதில், 25 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக சந்திக்கும் நிகழ்ச்சி என்பதால், அழைப்பிதழ் அச்சிடப்பட்டு, ஒவ்வொருவரையும் தேடி அழைப்பிதழ் கொடுத்தனர். நெடுங்கல் கிராமத்தில் நடந்த இந்த சந்திப்பில், ஒருவருக்கொருவர் தங்களது வாழ்க்கை அனுபவம், வேலை, திருமணம், தங்களது பள்ளி வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் போன்ற பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களை அழைத்து, அவர்களை முன்னாள் மாணவர்கள் கவுரவித்தனர். அனைவரும் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் விருந்து உபசரிப்பும், அனைவருக்கும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இதில் சிலர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

