ADDED : டிச 20, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், டிச. 20-
ஓசூரிலுள்ள, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகன் பிறந்தநாள் விழா நடந்தது. அவரது உருவப்படத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, ஓசூர் மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதாரக்குழு தலைவர் மாதேஸ்வரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கண்ணன், வரிவிதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா உட்பட பலர் மலர் துாவி மரியாதை செய்தனர்.
அதேபோல கிருஷ்ணகிரியில், தி.மு.க., கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் பிறந்தாள் விழா, மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.