/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெண்ணிடம் நகை பறிப்பு ஆந்திர வாலிபருக்கு 'காப்பு'
/
பெண்ணிடம் நகை பறிப்பு ஆந்திர வாலிபருக்கு 'காப்பு'
ADDED : செப் 24, 2025 01:25 AM
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகர், 3வது தெருவை சேர்ந்த மூதாட்டி கலைச்செல்வி, 65. தனியார் மருத்துவமனை ஊழியர். நேற்று காலை, 8:45 மணியளவில் தன் பேரப்பிள்ளைகளை தனியார் பள்ளி பஸ்சில் ஏற்றிவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக ஸ்கூட்டரில் வந்தவர் அவரது கழுத்திலிருந்த, 2.5 பவுன் சங்கிலியை பறித்து தப்பினார். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் அங்குள்ள, 'சிசிடிவி' காட்சிகளை வைத்து விசாரித்தனர். குப்பம் செல்லும் சாலையில் உள்ள குருவிநாயனப்பள்ளி சோதனைச்சாவடி அருகே சந்தேகத்திற்கிடமான வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம், அன்ந்த்பூர் மாவட்டம் தாடிபத்திரியை சேர்ந்த ஜெகதீஸ்வரர் சுதர்சன்குமார், 28, என்பதும், மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து தங்கச்சங்கிலியையும் மீட்டு விசாரித்து வருகின்றனர்.