/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆந்திரா சிவன் கோவில் மகா சிவராத்திரி விழா; 2 டன் அரிசி, 10 டன் காய்கறி அனுப்பி வைப்பு
/
ஆந்திரா சிவன் கோவில் மகா சிவராத்திரி விழா; 2 டன் அரிசி, 10 டன் காய்கறி அனுப்பி வைப்பு
ஆந்திரா சிவன் கோவில் மகா சிவராத்திரி விழா; 2 டன் அரிசி, 10 டன் காய்கறி அனுப்பி வைப்பு
ஆந்திரா சிவன் கோவில் மகா சிவராத்திரி விழா; 2 டன் அரிசி, 10 டன் காய்கறி அனுப்பி வைப்பு
ADDED : பிப் 26, 2025 07:26 AM
ஓசூர்: மகா சிவராத்திரியை முன்னிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க, ஆந்திர மாநிலம், முகிலி கிராமத்திலுள்ள சிவன் கோவிலுக்கு, 2 டன் அரிசி மற்றும் 10 டன் காய்கறிகளை, ஓசூர் பகுதி மக்கள் அனுப்பி வைத்தனர்.
ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், பலமனேரி அடுத்த முகிலி கிராமம் அருகே, தேவர்கொண்டா ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் கார்த்திகை மகா தீபம் மற்றும் மகா சிவராத்திரி நாட்களில், பல ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மலையேறி செல்வது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு, ஓசூர் சேவா சங்கம் சார்பில், அன்னதானம் வழங்கப்படுகிறது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு, தேவர்கொண்டா ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இன்று, ஓசூர் சேவா சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில், 9 வது ஆண்டாக, 25,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக, ஓசூர் சின்னஎலசகிரியில் இருந்து, 2 டன் அரிசி, 10 டன் காய்கறி களுடன், ஈச்சர் லாரி நேற்று கோவிலுக்கு புறப்பட்டது.
அதேபோல், மலையேறும் பக்தர்களுக்கு வழங்க, 10 டன் தர்ப்பூசணி பழங்களும் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், ஓசூர் சேவா சங்கம் சார்பில், சண்முகம் தலைமையில், பெருமாள், சிவா, டேவிட், வெங்கடேஷ், பாபு, தேவராஜ் உட்பட, 200 க்கும் மேற்பட்டோர், 15 வாகனங்களில் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக, சின்னஎலசகிரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள், பூஜை செய்து புறப்பட்டனர்.
முகிலி தேவர்கொண்டா ஜலகண்டேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்தால், கடன் பிரச்னை, உடல்நிலை பாதிப்பு சரியாகும் என்றும், வியாபாரம் வளர்ச்சியடையும் எனவும், ஓசூர் பகுதி பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.