/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தரமற்ற முறையில் நடக்கும் அங்கன்வாடி கட்டட பணி
/
தரமற்ற முறையில் நடக்கும் அங்கன்வாடி கட்டட பணி
ADDED : ஏப் 23, 2025 01:19 AM
தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை அடுத்த குந்துக்கோட்டை பஞ்., உட்பட்ட ஏணிபண்டா கிராமத்தில், புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்படுகிறது. இங்கு தரமற்ற பொருட்களை கொண்டு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், கட்டடத்தின் தரைதளம், கான்கிரீட் தரமற்ற நிலையில் கட்டப்பட்டு வருவதாகவும், அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சரியான அளவு சிமென்ட் சேர்க்காமல் கட்டுமானம் நடப்பதாலும், போதிய தண்ணீர் ஊற்றி பராமரிக்காமல் உள்ளதாலும், கையில் உடைத்தால் கூட, கட்டுமானம் உடைந்து வருவதாக மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உடனடியாக கட்டுமான பணியை பார்வையிட்டு, தரமான முறையில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

