/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அண்ணாதுரை நினைவு நாள் அனுசரிப்பு
/
அண்ணாதுரை நினைவு நாள் அனுசரிப்பு
ADDED : பிப் 04, 2025 05:45 AM
தர்மபுரி: தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 56வது நினைவு தினம், தர்மபுரி கிழக்கு மாவட்ட மற்றும் நகர, தி.மு.க., சார்பில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தர்மபுரி ராஜ-கோபால் கவுண்டர் பூங்கா அருகில் இருந்து அமைதி ஊர்வலம் நடந்தது. பின், கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிர-மணி தலைமையில், 4 ரோட்டிலுள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், நகர செயலாளர் நாட்டான் மாது உள்பட பலர் பங்கேற்றனர்.
தர்மபுரி மாவட்ட மற்றும் நகர, அ.தி.மு.க., சார்பில், கட்சியின் அமைப்பு செயலாளர் முல்லைவேந்தன்
தலைமையில், கட்சி நிர்-வாகிகள் மாலை அணிவித்தனர். நகர செயலாளர் ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.
தர்மபுரி மாவட்ட, அ.ம.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.* அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள அண்ணாதுரை சிலைக்கு, அரூர் நகர அ.தி.மு.க.,
செயலாளர் பாபு தலைமையில், அரூர் எம்.எல்.ஏ., சம்பத்குமார் மாலை அணி-வித்து மரியாதை செலுத்தினார்.
இதில், தெற்கு ஒன்றிய செய-லாளர் பசுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரூர் கச்சேரி-மேட்டில், தி.மு.க.,
சார்பில், தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமையில், அக்கட்சியினர் அண்ணாதுரை
சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், தர்-மபுரி எம்.பி., மணி மற்றும் மாவட்ட, ஒன்றிய,
நகர நிர்வாகிகள் உள்பட, பலர் கலந்து கொண்டனர். இதே போல், மொரப்பூர், கம்-பைநல்லுார் பகுதியிலும்
அண்ணாதுரை நினைவு நாள் அனுசரிக்-கப்பட்டது.