/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அண்ணாதுரை நினைவு நாள் அனுசரிப்பு மாவட்ட செயலாளர் வேண்டுகோள்
/
அண்ணாதுரை நினைவு நாள் அனுசரிப்பு மாவட்ட செயலாளர் வேண்டுகோள்
அண்ணாதுரை நினைவு நாள் அனுசரிப்பு மாவட்ட செயலாளர் வேண்டுகோள்
அண்ணாதுரை நினைவு நாள் அனுசரிப்பு மாவட்ட செயலாளர் வேண்டுகோள்
ADDED : பிப் 01, 2025 06:56 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் வெளியிட்ட அறிக்கை:
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 56-வது நினைவு நாள், நாளை மறுநாள், தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அரூர் ரவுண்டா-னாவில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் கிளை நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இதேபோன்று மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அந்தந்த பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் அண்ணாதுரை உருவ சிலைக்கும், உருவ படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்த வேண்டும். இந்த நிகழ்ச்சிகளிலும் அந்தந்த பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்-பாளர்கள் உள்ளிட்ட தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்த வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.