/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அண்ணாதுரை நினைவு நாள் அமைதி பேரணி
/
அண்ணாதுரை நினைவு நாள் அமைதி பேரணி
ADDED : பிப் 04, 2025 05:40 AM
கிருஷ்ணகிரி: தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 56வது நினைவு நாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க. சார்பில், மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமையில் அமைதி பேரணி, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள அண்ணாதுரை சிலையை அடைந்தது. சிலைக்கு தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்-தினர். முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன்,
நகர செய-லாளர் நவாப், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, பொதுக்குழு
உறுப்பினர் அஸ்லம் உள்-பட, 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
* கிருஷ்ணகிரி மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், கிருஷ்ணகிரி புதுப்-பேட்டை ராசுவீதியிலுள்ள அண்ணாதுரை
சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி, நகர செயலாளர் கேசவன் தலைமையில் நடந்தது. கிழக்கு மாவட்ட
செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்-தினார்.காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்டில், ஒன்றிய செயலாளர் பையூர் ரவி, நகர செயலாளர் விமல் ஆகியோர்
தலைமையில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன் கலந்து கொண்டனர்.* ஊத்தங்கரையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,
தமிழ்செல்வம் அண்ணாதுரையின் உருவ படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.* ஹிந்து சமய அறநிலைய துறை சார்பில், கிருஷ்ணகிரி ஒன்றியம் காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலில்
சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் டி.ஆர்.ஓ., சாத-னைக்குறள் கலந்து
கொண்டார். இதே போல கிருஷ்ணகிரி தாலுகா கணவாய்ப்பட்டி வெங்கட்ரமண சாமி கோவில், பாலே-குளி
அனுமந்தராய சாமி கோவில், ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோவில் என மொத்தம், 8 கோவில்களில் சமபந்தி
விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் ஹிந்து சமய அறநிலைய துறை உதவி கமிஷனர் ராமுவேல், பரம்பரை
அறங்காவலர் கிருஷ்ணசந்த் உள்-பட பலர் கலந்து கொண்டனர்.* கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், மாவட்ட செய-லாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமையில்,
ஓசூர் ராம்நகர் அண்-ணாதுரை சிலை அருகே துவங்கி, தாலுகா அலுவலக சாலையி-லுள்ள அண்ணாதுரை சிலை
வரை அமைதி ஊர்வலம் நடந்தது. பின், அங்குள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரி-யாதை
செலுத்தப்பட்டது. மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர்
மாதேஸ்வரன், மாவட்ட பொருளாளர் சுகுமாரன், மாணவரணி அமைப்பாளர் கண்ணன், தலைமை செயற்குழு
உறுப்பினர் எல்லோராமணி, கவுன்சிலர் மஞ்சுளா முனிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.