/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆதிக்கத்தில் திராவிட கட்சிகள் இருந்தும் ஓசூரில் பராமரிப்பின்றி அண்ணாதுரை சிலை
/
ஆதிக்கத்தில் திராவிட கட்சிகள் இருந்தும் ஓசூரில் பராமரிப்பின்றி அண்ணாதுரை சிலை
ஆதிக்கத்தில் திராவிட கட்சிகள் இருந்தும் ஓசூரில் பராமரிப்பின்றி அண்ணாதுரை சிலை
ஆதிக்கத்தில் திராவிட கட்சிகள் இருந்தும் ஓசூரில் பராமரிப்பின்றி அண்ணாதுரை சிலை
ADDED : டிச 09, 2024 07:40 AM
ஓசூர்: தமிழக எல்லையான ஓசூர் சட்டசபை தொகுதியை, 2016 வரை தேசிய கட்சிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. அதன்பின், 2016 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி வெற்றி பெற்று, அமைச்சரானார். அதன் பின் கடந்த, 2019 இடைத்தேர்தலில், தற்போதைய, தி.மு.க., மாநகர செயலாளரும், மேயருமான சத்யா எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றார். பின், 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் வெற்றி பெற்றார். இப்படி, ஓசூர் தொகுதி, திராவிட கட்சிகளின் கோட்டையாக மாறியுள்ளது.
ஆனால், தி.மு.க.,வை உருவாக்கிய அண்ணாதுரையின் சிலை, ஓசூர் ராம்நகரில் கவனிக்கப்படாமல் குப்பை கொட்டப்படும் இடம் போல் மோசமான நிலையில் உள்ளது. 'அண்ணா நாமம் வாழ்க' என கோஷமிடும், அ.தி.மு.க.,வினரும் இச்சிலையை கண்டுகொள்வதில்லை. அண்ணாதுரை நினைவு நாள், பிறந்த நாளில், தி.மு.க.,வினர் தாலுகா அலுவலக சாலையிலுள்ள அண்ணாதுரை சிலைக்கும், அ.தி.மு.க.,வினர் அண்ணா நகரிலுள்ள அண்ணாதுரை சிலைக்கும் மாலை அணிவித்து சென்று விடுகின்றனர். ஓசூர் ராம்நகர் பக்கமே வருவதில்லை. ஆனால், அக்கட்சிகளின் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் ராம்நகரில் தான் நடக்கிறது. ஆனால், அங்கு மோசமான நிலையிலுள்ள அண்ணாதுரை சிலையை, இரு கட்சிகளும் கவனிப்பதில்லை.
ஓசூர் மாநகராட்சியில், பேரறிஞர் அண்ணா பெயரில் மாமன்ற கூட்டரங்கமும், நகருக்குள் அண்ணாதுரை வணிக வளாகமும் உள்ளது. ஆனால், ராம்நகரில் அண்ணாதுரை சிலையை, தி.மு.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக இருப்பதாக, திராவிட கட்சி தொண்டர்கள் புலம்புகின்றனர்.