/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் முகாம் நடக்கும் இடம் அறிவிப்பு
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் முகாம் நடக்கும் இடம் அறிவிப்பு
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் முகாம் நடக்கும் இடம் அறிவிப்பு
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் முகாம் நடக்கும் இடம் அறிவிப்பு
ADDED : ஜூலை 27, 2025 12:57 AM
ஓசூர், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடக்கும் இடங்கள் குறித்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் ஆக., 14ம் தேதி வரை முதற்கட்டமாக, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில், 78 முகாம்கள் நடக்க உள்ளன. கடந்த, 15 முதல் நேற்று முன்தினம் வரை நடந்துள்ள, 36 முகாம்களில் மொத்தம், 14,917 கோரிக்கை மனுக்கள், 11,269 மகளிர் உரிமை தொகைக்கான மனுக்கள் வந்துள்ளன. முகாம் நாளிலேயே, 206 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளன. வரும், 29ம் தேதி, கிருஷ்ணகிரி நகராட்சி, 12, 22, 23 ஆகிய வார்டுகளுக்கு, சென்னை சாலையில் உள்ள ஜெயலட்சுமி மகாலில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடக்கிறது.
மத்துார் ஒன்றியம், அந்தேரிப்பட்டி, கெரிகேப்பள்ளி, கொடமாண்டப்பட்டி பஞ்.,க்களுக்கு, கெரிகேப்பள்ளி நாச்சியப்ப கவுண்டர் திருமண மண்டபத்திலும், ஓசூர் ஒன்றியம், படுதேப்பள்ளி, பாலிகானப்பள்ளி, தும்மனப்பள்ளி, அலசப்பள்ளி, பட்டுவாரப்பள்ளி பஞ்.,க்களுக்கு, குடிசெட்லு திம்மராய சுவாமி கோவில் அருகிலும், தளி ஒன்றியம், ஜாகீர் கோடிப்பள்ளி, கெம்பட்டி, பின்னமங்கலம் ஆகிய பஞ்.,க்களுக்கு, மதகொண்டப்பள்ளி அரசு தெலுங்கு மேல்நிலைப் பள்ளியிலும், பர்கூர் ஒன்றியம், புளியம்பட்டி, வலசகவுண்டனுார், பஞ்.,க்களுக்கு, புளியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், சூளகிரி ஒன்றியம், பி.குருபரப்பள்ளி, பன்னபள்ளி, நெரிகம் பஞ்.,க்களுக்கு, பி.குரு
பரப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் முகாம்கள் நடக்க உள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.