/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கந்தவேலன் கோவிலில் வருஷாபிேஷக விழா
/
கந்தவேலன் கோவிலில் வருஷாபிேஷக விழா
ADDED : டிச 07, 2024 07:24 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கல்லுகுறிக்கி கிராமத்தில், சக்தி விநாயகர், பாலமுருக கந்தவேலன், எல்லம்மாள் கோவில் மூன்றாம் ஆண்டு வருஷாபி ேஷக விழா நேற்று நடந்தது.
இதையொட்டி அதிகாலை, 4:30 மணிக்கு கணபதி பூஜை, கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், முருகர் மூலமந்திர ஜப ஹோமம் நடந்தது. 8:30 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனை காட்டப்-பட்டு, 11:00 மணிக்கு பாலமுருக கந்தவேலனுக்கு, 100க்கும் மேற்-பட்ட பெண்கள் பால் குடங்களை, உற்சவர் சுவாமியுடன் ஊர்வல-மாக எடுத்துச் சென்றனர். சிவன், பார்வதி
வேடம் அணிந்து பக்-தர்கள் வேண்டுதல் நிறைவேற்றினர். தொடர்ந்து கோவிலில், பால-முருகனுக்கு பால் அபி ேஷகம்
செய்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.