/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சார்பதிவாளரிடம் விசாரணை
/
லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சார்பதிவாளரிடம் விசாரணை
லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சார்பதிவாளரிடம் விசாரணை
லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சார்பதிவாளரிடம் விசாரணை
ADDED : டிச 25, 2024 01:52 AM
ஊத்தங்கரை, டிச. 25-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மாதம், 8ல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்.
அதை தொடர்ந்து, நேற்று தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், ஊத்தங்கரை அலுவலகத்திற்கு வந்து, சார்பதிவாளர் மோனிகாவிடம் விசாரணை நடத்தினர். கடந்த மாதம் நடந்த சோதனையின் போது, சார்பதிவாளர் வெளியே சென்றதால், அது தொடர்பாக அவரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த மாதம் நடந்த சோதனையில், சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத, 1.85 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடர்ச்சியான சோதனைகள், லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் இந்த நடவடிக்கை, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும், பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்படுவதால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். நேற்று நடந்த விசாரணையால், பத்திரப்பதிவு பணிகள், ஒரு மணி நேரத்திற்கு மேல் தடைபட்டது.
இதனால், பத்திரப்பதிவுக்கு வந்தவர்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய சூழல்
ஏற்பட்டது.

