/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஊழல் தடுப்பு வார விழிப்புணர்வு பேரணி
/
ஊழல் தடுப்பு வார விழிப்புணர்வு பேரணி
ADDED : நவ 01, 2025 12:51 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புதுறை இன்ஸ்பெக்டர் ரவி தலைமை வகித்து பேசினார்.தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட சி.இ.ஓ.,வின் உதவியாளர் வெங்கடேசனுடன் சேர்ந்து துவக்கி வைத்தார்.
இதில், மாணவர்கள் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி, பெங்களூரு ரோடு, காந்திசாலை வழியாக மீண்டும் பள்ளியிலேயே நிறைவடைந்தது.கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.எஸ்.ஐ., விஜயகுமார், மணிவண்ணன், மஞ்சு நாதன் ஸ்ரீதர், ரவி, அருண்குமார் உள்ளிட்ட போலீசார், ஆசிரியர்கள் மற்றும், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

