/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : அக் 07, 2024 03:16 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் ரோட்டரி கிளப் ஆப் ஓசூர் எலைட், ரோட்டரி ராயல்ஸ், வரம் மருத்துவமனை மற்றும் லா கிளாரென்சியா அமைப்பு ஆகியவை சார்பில், புகையிலை மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்து நடந்து சென்றார்.
முன்னதாக எம்.எல்.ஏ., பிரகாஷ் தலைமையில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் புகையிலை மற்றும் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.ஓசூர் சிஸ்யா பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி, தளி சாலை மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று உழவர் சந்தை அருகே நிறைவு பெற்றது. பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர், போதை
பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். தொடர்ந்து, மூக்கண்டப்பள்ளி ஹில்ஸ் ஓட்டலில், 10க்கும் மேற்பட்ட பள்ளிகளுடன் இணைந்து, ஓவியம், நடன போட்டிகள்
நடத்தப்பட்டு, மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, கிருஷ்ணகுமார் செய்திருந்தார்.