/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 02, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில், போதை பொருட்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணி பள்ளி வளாகத்திலிருந்து கல்லாவி சாலை வழியாக,
நான்கு ரோடு சந்திப்பு, பஸ் ஸ்டாண்ட், தர்மபுரி மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஜி.ஹெச்., வழியாக பள்ளிக்கு சென்றது. இதில், 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் போதை பொருளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி, பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் போச்சம்பள்ளி போலீசார் உடன் சென்றனர்.