/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்கு தற்காலிக பணியாளர் நியமனம்
/
டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்கு தற்காலிக பணியாளர் நியமனம்
டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்கு தற்காலிக பணியாளர் நியமனம்
டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்கு தற்காலிக பணியாளர் நியமனம்
ADDED : செப் 13, 2024 07:05 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், டெங்கு காய்ச்சல் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்து பேசியதாவது:
மாவட்டத்தில், காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் தரவுகளுடன், அதிக பாதிப்புகள் உள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழுவினர் மூலம், காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்படும்போது, முகாம்களில் கலந்து கொண்டு சிகிச்சை பெறலாம். டெங்கு அறிகுறிகள் ஏதேனும் இருப்பின், அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது பதிவு செய்த மருத்துவரை அணுகி, சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். கொசு ஒழிப்பு பணிகளுக்காக அனைத்து நகர, கிராம பகுதிகளில் களப்பணிகளை மேற்கொள்ள, 546 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை, 837 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அதில், 30,808 பொதுமக்கள் சிகிச்சை பெற்று, பலன் அடைந்துள்ளனர்.இவ்வாறு, அவர் பேசினார். மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

