/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பள்ளியில் 8ம் வகுப்பு மாணவிக்கு பாராட்டு விழா
/
அரசு பள்ளியில் 8ம் வகுப்பு மாணவிக்கு பாராட்டு விழா
அரசு பள்ளியில் 8ம் வகுப்பு மாணவிக்கு பாராட்டு விழா
அரசு பள்ளியில் 8ம் வகுப்பு மாணவிக்கு பாராட்டு விழா
ADDED : மே 22, 2024 06:49 AM
ஓசூர் : ஓசூர், பேடரப்பள்ளியில் மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் படித்த, 135 மாணவ, மாணவியர், 8ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அருகிலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 9ம் வகுப்பில் சேர்ந்து, மாணவ, மாணவியர் அவர்களது உயர்கல்வியை தொடரும் வகையில், மாற்றுச்சான்றிதழ் வழங்கும் விழா பள்ளியில் நேற்று நடந்தது. தலைமையாசிரியர் பொன்நாகேஷ், மாணவ, மாணவியருக்கு மாற்றுச்சான்றிதழை வழங்கினார்.
குறிப்பாக, இப்பள்ளியில், 8ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாணவி நித்யாஸ்ரீ, கல்வி தரத்தில் சிறந்து விளங்கும் சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி பள்ளியில் படிக்க தேர்வாகி செல்வதால், அவரை தலைமையாசிரியர் பொன்நாகேஷ் பாராட்டி மாற்றுச்சான்றிதழ் வழங்கினார். சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி பள்ளியில் படிக்க, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மாணவி நித்யாஸ்ரீ, தளி அடுத்த பின்னமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவன் லட்சுமி நரசிம்மா ஆகிய இருவர் மட்டுமே தேர்வாகியுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.

