UPDATED : அக் 11, 2026 02:34 AM
ADDED : அக் 11, 2026 02:15 AM

முதல்வர் கோப்பை போட்டிகளில்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரி
யில் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி களில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர்(பொ) சாந்தி தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை இணை பேராசியர் கல்பனா வரவேற்றார். விழாவில் முதல்வர் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பதக்கம், சான்றிதழ்களை, கிருஷ்ண
கிரி, த.வெ.க., எம்.எல்.ஏ., முகுந்தன் வழங்கி பேசுகையில், “மாணவி யர் படிக்கும் காலத்தில் நல்ல நண்பர்களை பெறவேண்டும். பல்வேறு திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, சாதனை மங்கைகளாக வரவேண்டும்,” என்றார்.
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் மொத்தம், 340 மாணவியர் கலந்து கொண்டனர். இதில், 87 மாணவியர், முதல், 2ம், 3ம் இடம் பெற்று, 1.47 லட்சம் ரூபாய் பரிசுகளை வென்றுள்ளனர். இக்கல்லுாரி மாணவி நந்தினி ஓட்டப்பந்தயத்தில் முதலிடம், தக்சா குண்டு எறிதலில், மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என, கல்லுாரி முதல்வர் தெரிவித்தார்.
