ADDED : செப் 25, 2026 05:50 AM
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி, ஆட்சேர்ப்பு முகாம் இன்று (25ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி பாதுகாப்பு பணிகள் மற்றும் தயார் நிலையில் உள்ள பணிகள் குறித்து கோவை ராணுவ ஆட்-சேர்ப்பு மைய இயக்குனர் கர்னல் முன்னொளி, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், எஸ்.பி., அனிதா ஆகியோர் நேற்றும் ஆய்வு செய்தனர்.
இது குறித்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கூறியதாவது: கோவை ராணுவ ஆட்சேர்ப்பு அலு-வலகம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட விளை-யாட்டு அரங்கில் இன்று (25ம் தேதி) முதல் வரும் அக்., 7 வரை ஆட்சேர்ப்பு பேரணி நடக்கிறது. இதற்-கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும், குடிநீர், மருத்துவ வசதி, ராணுவ மற்றும் காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், ஆன்லைன் பொது நுழைவுத்-தேர்வில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்க-ளுக்கு அனுமதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல ஓடுதளம், உயரம் தாண்டுதல், மருத்-துவ பரிசோதனைக்கான அறை உள்ளிட்ட பணிகள் தயார் நிலையில் உள்ளது. மேலும், கூடுதலாக தேவைப்படும் போது அரசு கலைக்கல்-லுாரி மைதான வளாகத்தில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
