தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 5 நாட்கள் வேலையை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

5 நாட்கள் வேலையை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

5 நாட்கள் வேலையை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 25, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 05:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை, பாரபட்ச-மற்ற அனைவருக்குமான ஊக்கத்தொகை, புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமுலாக்கல், புதுப்பிக்கப்பட்ட பென்சன், வங்கியிலுள்ள எழுத்தர், கடைநிலை ஊழியர் காலி இடங்களை நிரப்புதல், கடந்த ஊதிய ஒப்பந்த நிலுவையிலுள்ள கோரிக்கை-களை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி பஞ்சாப் நேஷனல் வங்கி முன், நுாற்றுக்கணக்கான வங்கி ஊழியர்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடு-பட்டனர்.ஊழியர் சங்க பொறுப்பாளர் ஹரிராவ் தலைமை வகித்தார். அதிகாரிகள் சங்க பொறுப்பாளர்கள் கார்த்திக், சித்தார்த்தன், தினேஷ், ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் பொன் மகாராஜா, அசோக்-குமார், தமிழ்மணி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஊழியர் சங்க செயலாளர் ராஜசேகரன் நன்றி கூறினார். இதேபோல், அடுத்த கட்ட நடவடிக்கையாக, வரும், 28 முதல், -30ம் தேதி வரை, மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், அக்., 26 முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்-டத்தில் ஈடுபட போவதாகவும் வங்கி ஊழியர்கள்

அறிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us