/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலை விபத்தில் ராணுவ வீரர் சாவு
/
சாலை விபத்தில் ராணுவ வீரர் சாவு
ADDED : ஜூலை 04, 2024 05:57 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த கெங்கபிராம்பட்டி சுப்ப-ராயன் நகரை சேர்ந்தவர் ரத்தினவேல், 35, ராணுவ வீரர்; இவருக்கு மனைவி, 2 பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இவர், திருச்சி ராணுவ பயிற்சி பள்ளியில் என்.சி.சி., அவில்தாராக பணி-புரிந்து வந்தார். 10 நாள் விடுமுறையில் வீட்டுக்கு வந்தவர், நேற்று முன்தினம் மாலை, பைக்கில் திருப்பத்துார் தேசிய நெடுஞ்சாலையில் சென்-னானுார் அருகே சென்றபோது, நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.முட்புதர்கள் அதிகமாக இருந்ததால், அவர் விழுந்-தது யாருக்கும் தெரியவில்லை. அவரை காண-வில்லை என, இரவு முழுதும் அவரது உறவி-னர்கள் தேடிய நிலையில், ஊத்தங்கரை போலீசில் புகார் அளித்தனர். அவர் மொபைல்போன் எண் கொண்டு, அவர் விழுந்த இடத்தை நேற்று காலை போலீசார் கண்டறிந்-தனர். முட்புதருக்குள் பைக்குடன் இறந்து கிடந்த ராணுவ வீரர் ரத்தினவேலை மீட்டு உறவினர்க-ளுக்கு தகவல் தெரிவித்து, தொடர்ந்து விசாரிக்-கின்றனர்.