/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நடமாடும் அறிவியல் கண்காட்சி வாகனம் 158 பள்ளிகள் பார்வையிட ஏற்பாடு
/
நடமாடும் அறிவியல் கண்காட்சி வாகனம் 158 பள்ளிகள் பார்வையிட ஏற்பாடு
நடமாடும் அறிவியல் கண்காட்சி வாகனம் 158 பள்ளிகள் பார்வையிட ஏற்பாடு
நடமாடும் அறிவியல் கண்காட்சி வாகனம் 158 பள்ளிகள் பார்வையிட ஏற்பாடு
ADDED : ஜூலை 28, 2025 04:24 AM
ஓசூர்: திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, கொக்கி-ரகுளம் பகுதியில், மாவட்ட அறிவியல் மையம் உள்ளது. இது, இந்திய அரசின் கலாசார அமைச்சகத்தால் நிர்வகிக்கப்பட்டு, தேசிய அறி-வியல் அருங்காட்சியக கவுன்சிலின் கீழ் இயங்குகிறது. இங்குள்ள நடமாடும் அறிவியல் கண்காட்சி வாகனம் மூலம், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் கண்காட்சி நடத்தப்படுகிறது.
ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலுள்ள, 158 அரசு பள்ளி மாணவ, மாண-வியர், விண்வெளி தொழில்நுட்பத்தை அறிய வசதியாக, நெல்லை அறிவியல் மையத்தின் நடமாடும் அறிவியல் கண்காட்சி வாகனம் கடந்த, 16ம் தேதி ஓசூர் வரவ-ழைக்கப்பட்டுள்ளது. ஒரு மாதம் வரை இருக்கும் இந்த வாகனம், ஒரு அரசு பள்ளியில் நிறுத்தப்பட்டு, பள்ளியை சுற்றி
யுள்ள மற்ற அனைத்து அரசு பள்ளி மாணவ, மாணவியரும், அங்கு வந்து கண்காட்சியை பார்வையிட ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.
இந்த வாகனத்தில்,
சாட்டிலைட் குறித்த அடிப்படைகள், சாட்டிலைட் சுற்றுப்
பாதைகள் எத்தனை உள்ளன. எந்தெந்த துறைக்கு சாட்டிலைட் பயன்படுகிறது
என்பது போன்ற பல்வேறு தகவல்கள் உள்ளன.
இதுவரை மொத்தம், 4 பள்ளிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு மொத்தம், 55 அரசு பள்ளி மாணவ, மாணவியர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர். மொத்தம், 11 அரசு பள்ளிகளில் வாகனம் நிறுத்தப்பட்டு, 158 அரசு பள்ளி மாணவ, மாணவியர்
பார்வையிட முடிவு செய்யப்
பட்டுள்ளது.