sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓட்டல் மேனேஜரை அரிவாளால் வெட்ட முயன்றவர் கைது

/

ஓட்டல் மேனேஜரை அரிவாளால் வெட்ட முயன்றவர் கைது

ஓட்டல் மேனேஜரை அரிவாளால் வெட்ட முயன்றவர் கைது

ஓட்டல் மேனேஜரை அரிவாளால் வெட்ட முயன்றவர் கைது


ADDED : பிப் 16, 2025 03:04 AM

Google News

ADDED : பிப் 16, 2025 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, மொபைல் திருடு போன விவகாரத்தில், ஓட்டல் மேனேஜரை அரிவாளால் வெட்ட முயன்ற வாலிபர் கைதானார்.

கிருஷ்ணகிரி அடுத்த ஜிஞ்சுப்பள்ளி ஏரிக்கரையோரம் ஓட்டல் ஒன்று உள்ளது. அதில் பணிபுரியும் மணிவண்ணன் என்பவரது மொபைல், கடந்த சில தினங்-களுக்கு முன் திருடு போனது. அவருக்கு சக ஊழியர் கமலேஷ் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதன்படி அவரிடம் ஓட்டல் மேனேஜர் விஷ்ணு கடந்த, 13ல் விசாரித்தார். கோபமடைந்த கமலேஷ், தன் நண்பர் பில்லனகுப்பத்தை சேர்ந்த அகர்நிவாஸ், 30 என்பவருக்கு தகவல் அளித்துள்ளார். அன்றிரவு, 10:30 மணி-யளவில் ஓட்டலுக்கு அரிவாளுடன் வந்த அகர்நிவாஸ், மணி-வண்ணனை தாக்கியவர், விஷ்ணுவிடம், 'என் நண்பனை எப்படி நீ சந்தேகப்படலாம்' எனக்கூறி அரிவாளால் வெட்ட துரத்தினார். விஷ்ணு தப்பியதால், ஓட்டல் கண்ணாடி கதவு, வெளியேயிருந்த பேக்கரியின் கண்ணாடி ஷோகேஸ், வாசலில் நின்ற ஒரு காரின் கண்ணாடி ஆகியவற்றை அடித்து நொறுக்கினார்.

ஓட்டல் மேனேஜர் விஷ்ணு குருபரப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். நேற்று முன்தினம், காலை, 9 மணியளவில், குருபரப்-பள்ளி அருகே, வேப்பனஹள்ளி சாலையில் மொபட்டில் சென்ற அவரை, போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அகர்நிவாஸ் மீது, அவ்வழியே வந்த பலேனோ கார் மோதி, அவரை சிறிது துாரம் இழுத்து சென்றது. இதில், வலது கால், இடது கை, தலை உள்ளிட்ட இடங்களில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரை போலீசார் கைது செய்து, சிகிச்சைக்கு, கிருஷ்ணகிரி அரசு மருத்து-வமனையில் சேர்த்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us