/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி கலை நிகழ்ச்சி
/
100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி கலை நிகழ்ச்சி
100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி கலை நிகழ்ச்சி
100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி கலை நிகழ்ச்சி
ADDED : ஏப் 13, 2024 10:43 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தொடர்ந்து குறைந்த அளவு ஓட்டுப்பதிவு நடைபெறும் மையங்களை ஆய்வு செய்து, அதில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு இலக்கை எட்டும் வகையில் விழிப்புணர்வு நடந்தது.
பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குள்ளம்பட்டி பஞ்.,ல் தொடர்ந்து மூன்று தேர்தல்களில் குறைந்த அளவே ஓட்டுப்பதிவு இருந்தது. இதனால் அப்பகுதியில் நேற்று மாலை, 5:00 மணிக்கு கிருஷ்ணகிரி தேர்தல் நடத்தும் அலுவலர் சரயு தலைமையில், மாட்டு வண்டியில் விளம்பர பதாகை வைத்தும், தெருக்களில் விழிப்புணர்வு வண்ணக் கோலங்கள் வரைந்தும், கோலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் அப்பகுதி மக்களுக்கு ஓட்டு அளிப்பதின் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.
நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலை நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.