/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்
/
சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்
ADDED : ஜன 04, 2026 07:36 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியிலுள்ள சிவன் கோயில்களில், ஆருத்ரா தரிசனம் நடந்தது.
மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடப்பது வழக்கம். அதன்படி கிருஷ்ணகிரி பழைய-பேட்டை சோமேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் கணபதி பூஜை, கலச ஸ்தாபனம், திருப்பள்ளி எழுச்சி நடந்தது.
அதிகாலையில் திருவெம்பாவை வழிபாட்டுடன் கோபுர தரிசனம் மற்றும் சுவாமி திருவீதி உலா நடந்தது. முன்னதாக, ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சிவ-காமி அம்பாள் சமேத நடராஜருக்கு, சிறப்பு பூஜை நடந்தது. அதேபோல, பழையபேட்டை கவீஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி சந்திரமவுலீஸ்வரர் கோவில், காவேரிப்பட்டணம் ஈஸ்வரன் கோவில் உள்பட மாவட்டத்திலுள்ள சிவன்
கோவில்களில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சிறப்பு பூஜை நடந்தன. இதில் திரளான
பக்தர்கள் பங்கேற்றனர்.

