/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் சாலையோரம் பூக்கடைக்கு அனுமதி தரக்கூடாதென வியாபாரிகள் வலியுறுத்தல்
/
ஓசூரில் சாலையோரம் பூக்கடைக்கு அனுமதி தரக்கூடாதென வியாபாரிகள் வலியுறுத்தல்
ஓசூரில் சாலையோரம் பூக்கடைக்கு அனுமதி தரக்கூடாதென வியாபாரிகள் வலியுறுத்தல்
ஓசூரில் சாலையோரம் பூக்கடைக்கு அனுமதி தரக்கூடாதென வியாபாரிகள் வலியுறுத்தல்
ADDED : ஜன 04, 2026 07:33 AM
ஓசூர்: ஓசூரில், சாலையோரம் பூக்கடைகள் வைத்து வியாபாரம் செய்ய அனுமதிக்கக்கூடாது என, மலர் வியாபாரிகள், மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளனர்.
ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள கோட்டை மாரியம்மன் மலர் மாலை பூக்கடை வியாபா-ரிகள் மற்றும் நிர்வாகி கள் நேற்று மதியம் கூட்டாக நிருபர்களிடம் கூறி-யதாவது:
ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே, தேசிய நெடுஞ்-சாலை மேம்பாலத்திற்கு அடியிலும், சர்வீஸ் சாலையோரம் நடைபாதையிலும் இருந்த பூக்க-டைகளை, சமீபத்தில் மாநகராட்சி நிர்வாகம் அகற்றி-யது. அதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் ஒன்-றிணைந்து, தனியார் கட்டடத்தில் வாடகைக்கு, 40 கடைகளை நடத்தி வருகிறோம். இந்நிலை யில், கடைகள் அகற்றப்பட்ட அதே இடத்தில் வேறு வியாபாரிகளை, பூக்கடைகள் வைக்க முயற்சிகள் நடக்கின்றன. எங்களை
அகற்றி விட்டு, வேறொரு நபர்களுக்கு கடைகள் நடத்த அனுமதி வழங்க நினைப்பது நியாயமில்லை.நாங்கள், தற்போது தனியார் கட்டடத்தில் வாடகை, மின்கட்டணம் செலுத்தி, கடைகளை நடத்தி வருகிறோம். மீண்டும் சாலையோரம் கடைகள் நடத்த மாநகராட்சி அனுமதி வழங்-கினால், எங்களது வாழ்வாதாரம்
பாதிக்கப்படும். மேலும், மக்களுக்கு பாதிப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படும். எனவே, சாலையோர நடை-பாதை மற்றும்
மேம்பாலத்திற்கு அடியில் பூக்க-டைகள் நடத்த அனுமதி வழங்கக்கூடாது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

