/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஜகத்குரு ஆதிசங்கரர் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
/
ஜகத்குரு ஆதிசங்கரர் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
ஜகத்குரு ஆதிசங்கரர் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
ஜகத்குரு ஆதிசங்கரர் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 19, 2024 06:48 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள சங்கரமடத்தில், செல்வ விநாயகர், ஜகத்குரு ஆதிசங்கரர், ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹா சுவாமிகள் கோவிலில்களின், ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வரும், 21ல் நடக்கிறது.
இதையொட்டி நாளை (ஏப். 20) காலை, 8:00 மணிக்கு, மஹாகணபதி பூஜை, கணபதி ஹோமம், கலச பிரதிஷ்டை, மாலை, 5:30 மணிக்கு, யாகசாலை பூஜை, தீபாராதனை, அஷ்டபந்தனம் சாற்றுதல், நாம சங்கீர்த்தனம், பரத நாட்டியம் ஆகியவை நடக்க உள்ளன.21 காலை, 6:30 மணிக்கு, யாகசாலை பூஜைகள், நாடி சந்தானம், கடம் புறப்பாடும், காலை, 9:00 மணிக்கு மேல், மஹா கும்பாபிஷேகம், மஹாதீபாராதனை நடக்க உள்ளன.