/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் மாநகராட்சிக்கு உதவி கமிஷனர் நியமனம்
/
ஓசூர் மாநகராட்சிக்கு உதவி கமிஷனர் நியமனம்
ADDED : நவ 04, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்,  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் வருவாய் பிரிவு உதவி கமிஷனராக இருந்த டிட்டோ, பழனி நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதனால், ஓசூர் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு செயற்பொறியாளர் (திட்டம்) நாராயணன், உதவி கமிஷனர் பணியிடத்தை கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில், கரூர் மாநகராட்சி வருவாய் பிரிவு உதவி கமிஷனராக இருந்த ஹேமலதா, ஓசூர் மாநகராட்சி உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கூடிய விரைவில் பொறுப்பேற்பார் என, மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.

