/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
/
தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED : நவ 04, 2025 01:59 AM
ஓசூர்,  ஓசூர் அடுத்த படுதேப்பள்ளி கிராமத்தில், பழமையான கரியால லிங்கேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கோவில் கோபுர நுழைவுவாயில் கும்பாபிஷேகம் மற்றும் சித்தேஸ்வர சுவாமி பிரதிஷ்டை விழா நேற்று நடந்தது. முன்னதாக, கனகதாசருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
குரும்பர் இன மக்கள் பாரம்பரிய அடையாளமான நடுக்கல்களுக்கு அலங்காரம்  செய்து சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து, கோவிலில் உள்ள பீரேஸ்வரா, கரியலிங்கேஸ்வரா, உஜ்ஜினி லிங்கேஸ்வரர் மற்றும்  லக்கம்மா தேவி ஆகிய உற்சவ மூர்த்திக
ளின் சிலைகளை, மேள, தாளங்கள் முழங்க சுமந்து ஊர்வலமாக சென்றனர்.குரும்பர் இன மக்கள், பாரம்பரிய முறைப்படி, தலை மேல் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக அலங்கரித்த காளைகளுக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்யப்பட்டது. ஏற்பாடுகளை, கரியால லிங்கேஸ்வரர் சுவாமி கோவில் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

