/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆசிரிய பயிற்றுனர்களுக்கு தன் சுத்தம், சுகாதாரம் பயிற்சி
/
ஆசிரிய பயிற்றுனர்களுக்கு தன் சுத்தம், சுகாதாரம் பயிற்சி
ஆசிரிய பயிற்றுனர்களுக்கு தன் சுத்தம், சுகாதாரம் பயிற்சி
ஆசிரிய பயிற்றுனர்களுக்கு தன் சுத்தம், சுகாதாரம் பயிற்சி
ADDED : நவ 04, 2025 01:59 AM
கிருஷ்ணகிரி,  கிருஷ்ணகிரி மாவட்ட திட்ட அலுவலகத்தில், திருச்சி கிராமாலயா மற்றும் ரெக்கிட் இணைந்து, டெட்டால் பள்ளி நலக்கல்வி திட்டத்தை, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, தன் சுத்தம் மற்றும் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய ஒரு நாள் பயிற்சி நடந்தது. உதவி திட்ட அலுவலர் மகேந்திரன், பயிற்சியை துவக்கி வைத்தார். நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நரசிம்ம ராஜலெட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அருண்ஜோதி, கணேசன் ஆகியோர் பேசினர்.
பயிற்சியில், தன் சுத்தம், பள்ளியின், வீட்டின் சுகாதாரம், நோயின்போது சுகாதாரம், சுற்றுப்புற, மாதவிடாய் சுகாதாரம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், கிராமாலயா நிர்வாக இயக்குனர் இளங்கோவன் பேசுகையில், ''இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில், 20,000 அரசு பள்ளியில் பயிலும், 2 லட்சம் மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்து, விழிப்புணர்வு மற்றும் சுகாதார பழக்க வழக்கங்களை வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்த டெட்டால் பள்ளி நலக்கல்வித் திட்டம் செயல்படுகிறது,'' என்றார்.
மேலும், சுகாதாரம் தொடர்பான தகவல் தொடர்பு சாதனங்களான சோப்பு வங்கி, பரமபத விளையாட்டு, சுவரொட்டிகள் மற்றும் சுகாதாரக் காட்சியகம் போன்றவைகள் குறித்து விளக்கப்பட்டது.  பயிற்சியை, ஆனந்தி, சகாயராஜ், மஞ்சு, சரண்யா, சிம்ரன், இந்திரா ஆகியோர் அளித்தனர். இதில், 50 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.

