/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஐயப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
/
ஐயப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : நவ 04, 2025 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம் ஒன்றியம், தட்ரஹள்ளி பஞ்., ஒட்டப்பட்டி கிராமத்தில் உள்ள ஹரிஹரசுதன் ஐயப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, கிராம மக்கள் சார்பாக நேற்று நடந்தது. இதில் நேற்று காலை, 2ம் கால யாக பூஜை, 108 திவ்ய ஹோமங்கள், ஐயப்ப சுவாமிக்கு மூல மந்திர ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தது.
யாத்ரா தான கலசங்களுடன் புறப்பாடு நடந்தது. பின்னர் செண்டை மேளம், பம்பை மேள, தாளங்கள் முழங்க  ஐயப்ப சுவாமி மற்றும் ஆலய கோபுர கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு கும்பாபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

