/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலை வசதி கோரி கலெக்டர் ஆபீசில் மனு
/
சாலை வசதி கோரி கலெக்டர் ஆபீசில் மனு
ADDED : நவ 04, 2025 01:59 AM
கிருஷ்ணகிரி, சூளகிரி தாலுகா மருதாண்டபள்ளி கிராம மக்கள், சாலை கோரி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கே.ஆர்.பி., அணை கட்ட நிலம் கொடுத்தவர்களுக்கு மருதாண்டபள்ளியில் இடம் ஒதுக்கினர். அதன்படி, 30 குடும்பத்தினர் கடந்த, 1956 முதல் அங்கு வசித்து வருகிறோம். சூளகிரியில் இருந்து மருதாண்டப்பள்ளிக்கு, 2 கி.மீ., தொலைவு உள்ளது. எங்கள் கிராமத்திற்கு கடந்த, 70 ஆண்டுகளாக பட்டா நிலத்தில் சென்று வந்தோம்.
கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன் நிலத்தின் உரிமையாளர் பாதையை அடைத்து விட்டார். இதனால் ஒற்றையடி பாதையில் மிகவும் சிரமத்துடன் தினமும் சென்று வருகின்றோம். மேலும், விளைப் பொருட்களை எடுத்துச் செல்ல மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எங்களுடன் வசிக்கும் மூன்று பேருக்கு, நிலமேம்பாட்டு திட்டத்தில், கடந்த 1984ல், 2 ஏக்கர் ஓணி புறம்போக்கு நிலத்திற்கு அரசு பட்டா வழங்கியுள்ளது. அதை அரசுக்கே மீண்டும் நாங்கள் வழங்கி விடுகிறோம். அந்த நிலத்தில் எங்களுக்கு புதிய சாலை அமைத்துத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

