sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தாசில்தார், துணை தாசில்தார்கள் மீது பொக்லைன் ஏற்றி கொல்ல முயற்சி

/

தாசில்தார், துணை தாசில்தார்கள் மீது பொக்லைன் ஏற்றி கொல்ல முயற்சி

தாசில்தார், துணை தாசில்தார்கள் மீது பொக்லைன் ஏற்றி கொல்ல முயற்சி

தாசில்தார், துணை தாசில்தார்கள் மீது பொக்லைன் ஏற்றி கொல்ல முயற்சி


ADDED : டிச 28, 2025 07:37 AM

Google News

ADDED : டிச 28, 2025 07:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த செங்கம்பட்டி அருகே ஆனந்துார் ஏரி உள்ளது. இங்கு மண் கடத்தல் நடப்பதாக, கலெக்டர் தினேஷ்குமாருக்கு புகார் வந்தது. அவரது உத்தர-வின்படி நேற்று ஊத்தங்கரை தாசில்தார் ராஜலட்-சுமி, துணை தாசில்தார்கள் சகாதேவன், ஜெயபால் மற்றும் அலுவலர்கள் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது, ஏரியில் பொக்லைன் உதவியுடன், லாரியில் மண் கடத்த முயன்றது தெரிந்தது. அதி-காரிகள் வருவதை கண்டவுடன் அவர்கள் வாக-னங்களை விட்டுவிட்டு தப்ப முயன்றனர். அப்-போது, பொக்லைன் வாகனத்தை வேகமாக இயக்கிய டிரைவர் அங்கு நின்ற தாசில்தார் மற்றும் துணை தாசில்தார்கள் மீது மோதி, கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதிலி-ருந்து அதிகாரிகள் விலகியுள்ளனர். மேலும் டிரை-வரை பிடிக்க முயன்றனர்.

இதையடுத்து வாகனத்தை நிறுத்திவிட்டு அவரும் ஓடிவிட்டார். அதிகாரிகள் புகார்படி அங்கு வந்த போச்சம்பள்ளி போலீசார், மண் கடத்தலில் ஈடுபட்ட ஒரு பொக்லைன் மற்றும் லாரியை பறி-முதல் செய்து, அதிகாரிகளை தாக்க முயன்று, தப்பி சென்றவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us