/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வாட்ச்மேனை கொலை செய்ய முயற்சி: 6 பேருக்கு வலை
/
வாட்ச்மேனை கொலை செய்ய முயற்சி: 6 பேருக்கு வலை
ADDED : அக் 11, 2025 12:32 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஐ.டி.ஐ., அருகில் கிருஷ்ணா எலக்ட்ரிக்கல் கடை உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், கெஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் நடத்தி வந்தார். கடந்த., 8ல் வழக்கம்போல் கடையை மூடி வீட்டிற்கு சென்றார். போச்சம்பள்ளி அடுத்த காட்டுவென்றஹள்ளியை சேர்ந்த திம்மன், 65, என்பவர் இரவு காவலில் இருந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, 2:00 மணியளவில் காரில் வந்த, 6 பேர் துாங்கி கொண்டிருந்த திம்மன் கழுத்தில் துணியால் இருக்கி உள்ளனர். அப்போது அவர் கத்தியுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தபோது, கும்பல் தப்பியது. 'சிசிடிவி' காட்சியில் எலக்ட்ரிக்கல் கடையில் உள்ள பொருட்களை திருடும் நோக்கில் வந்த கும்பல், வாட்ச்மேனை தாக்கியதும், ஆட்கள் வந்தவுடன் தப்பி செல்வதும் தெரிந்தது.பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.