/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தந்தை பலி
/
குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தந்தை பலி
ADDED : அக் 11, 2025 12:32 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, சூலாமலை அடுத்த மேல்கொட்டாயை சேர்ந்தவர் சிவன், 28, கூலித்தொழிலாளி. இவருக்கு ஷாலினி என்ற மனைவி, 2 வயதில் தனுஷ்மதி என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று காலை வீட்டில் விளையாடிய குழந்தை தனுஷ்மதி, எறும்பு வராமல் இருக்க பயன்படுத்தப்படும் சாக்பீஸ் வடிவிலான மருந்தை தின்றுள்ளார். இதை பார்த்த பெற்றோர் பதறியடித்தனர். தனுஷ்மதியை மருத்துவமனையில் காண்பிக்க, அவரை துாக்கி கொண்டு, டி.வி.எஸ்., எக்ஸல் மொபட்டில் சிவன் சென்றுள்ளார்.
காலை, 11:00 மணியளவில் பர்கூர் அரசு இன்ஜி., கல்லுாரி அருகே கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள வேகத்தடையில், நிலை தடுமாறி விழுந்த சிவன் படுகாய மடைந்தார்.
அருகிலிருந்தவர்கள் அவரையும், குழந்தையையும் மீட்டு பர்கூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். குழந்தை தனுஷ்மதியை மேல்சிகிச்சைக்காக
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.