sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கேரளா தோட்டத்தில் இருந்து எடுத்து வந்த யானை தந்-தங்களை விற்க முயற்சி: 8 பேர் கைது

/

கேரளா தோட்டத்தில் இருந்து எடுத்து வந்த யானை தந்-தங்களை விற்க முயற்சி: 8 பேர் கைது

கேரளா தோட்டத்தில் இருந்து எடுத்து வந்த யானை தந்-தங்களை விற்க முயற்சி: 8 பேர் கைது

கேரளா தோட்டத்தில் இருந்து எடுத்து வந்த யானை தந்-தங்களை விற்க முயற்சி: 8 பேர் கைது


ADDED : பிப் 25, 2025 06:51 AM

Google News

ADDED : பிப் 25, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: கேரளாவில் இருந்து எடுத்து வந்த, 7 கிலோ யானை தந்-தங்களை சேலத்தில் விற்க முயன்ற எட்டு பேரை வனத்துறை-யினர் கைது செய்தனர்.

சேலத்தில், யானை தந்தத்தை விற்க ஒரு கும்பல் முயல்வதாக, வன அலுவலர் கஷ்யாப் சசாங்க் ரவிக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரைமு-ருகன் தலைமையில், வனவர்கள், வனக்காப்பாளர்கள் மற்றும் வனக்காவலர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் ரகசிய கண்காணிப்பு மேற்கொண்டனர்.

நேற்று முன்தினம் சேலம் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில், இருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டி-ருந்தனர். அவர்களை தனிப்படையினர் பிடித்து விசாரணை மேற்-கொண்டனர். அதில், அரியானூரை சேர்ந்த சக்திவேல், 48, பெத்த-நாயக்கன்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணன், 76, என்பதும், யானை தந்தம் வாங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதும் தெரியவந்தது. பின் அவர்களை, சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.அவர்கள் அளித்த தகவல்படி, கரியகோவில் வளவை சேர்ந்த முரளி, 28, என்பவரை பிடித்தனர். பின், பாழடைந்த குடோன் ஒன்றில் பதுக்கி வைத்திருந்த தலா, மூன்றரை கிலோ எடையு-டைய இரண்டு யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முரளி கூலி வேலைக்காக, கேரள மாநிலம் கோழிகோட்டிற்கு சென்று, அங்குள்ள ஒரு தோட்டத்தில் ‍வேலை செய்தார். அங்கு புதைத்து இருந்த யானை தந்தத்தை ரகசியமாக எடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார்.இதற்கு உடந்தையாக இருந்த, ஆத்துார் அருகே தென்னகுடிபா-ளையத்தை சேர்ந்த இளங்கோவன், 56, விழுப்புரம் மாவட்டம் வஞ்சிக்குழியை சேர்ந்த சங்கர், 35, பாலு, 31, தர்மபுரி மாவட்டம் மாம்பட்டியை சேர்ந்த ஜெகநாதன், 46, கள்ளக்குறிச்சி மாவட்டம் நொச்சிமேட்டை சேர்ந்த ராஜூவ்காந்தி, 34ல ஆகியோரை வனத்-துறையினர் பிடித்தனர்.இது தொடர்பாக எட்டு பேர் மீது, வனத்துறையினர் வழக்குப்ப-திந்து நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 7 கிலோ யானை தந்தம், 7 மொபைல் போன், ஒரு ஹீரோ ஹோண்டா பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.யானையை வேட்டையாடி தந்தம் எடுக்கப்பட்டதா அல்லது இறந்த யானையிடம் இருந்து எடுக்கப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்யும் பணி நடக்கிறது.






      Dinamalar
      Follow us