/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் அலட்சியம் கனமழை கொட்டியும் நிரம்பாத நீர்நிலைகள்
/
ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் அலட்சியம் கனமழை கொட்டியும் நிரம்பாத நீர்நிலைகள்
ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் அலட்சியம் கனமழை கொட்டியும் நிரம்பாத நீர்நிலைகள்
ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் அலட்சியம் கனமழை கொட்டியும் நிரம்பாத நீர்நிலைகள்
ADDED : ஜன 25, 2025 02:17 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தும், நீர்
நிலைகள் ஆக்கிரமிப்பால் மழைநீர் வீணானது. அதிகாரிகளின் மெத்தனத்தாலும், ஆக்கிரமிப்புகளை கண்டு கொள்ளாமல் விட்ட-தாலும், குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆண்டுதோறும் பெய்யும் வடகி-ழக்கு பருவமழையின் சராசரி அளவு, 291 மி.மீ., நடப்பாண்டில் வழக்கத்தை விட, 15 சதவீத அளவிற்கு அதாவது, 335 மி.மீ., அளவில் மழை பெய்தது. குறிப்பாக ஊத்தங்கரை, போச்சம்-பள்ளி தாலுகாக்களில் டிச., 1ம் தேதியில், ஒரே நாளில், 50 செ.மீ., மழை பெய்தது. இருப்பினும் நீர்நிலைகள் ஆக்கிர-மிப்பால் மழைநீர் வெளியேற வழியின்றி காட்டாற்று வெள்ள-மாக மாறி, சாலைகளை துண்டித்தும், குடியிருப்புகள், போலீஸ் ஸ்டேஷன், வணிக வளாகங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் புகுந்தும் சேதங்களை ஏற்படுத்தியது.நிரம்பாத நீர்நிலைகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவ
மழையால் கிருஷ்ணகிரியில், 76 ஏரிகள், காவேரிப்பட்டணம், 72, மத்துார், 65, பர்கூர், 165, ஊத்தங்கரை, 101, வேப்பன-ஹள்ளி, 81, சூளகிரி, 124, கெலமங்கலம், 110, ஓசூர், 132, தளியில், 248 ஏரிகள் என மொத்தம், 10 ஊராட்சி ஒன்றியங்-களில், 1,174 ஏரிகள் உள்ளன. இதில், 197 ஏரிகள் மட்டுமே நிரம்பின. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால், 977 ஏரிகள் நிரம்ப-வில்லை. அதேபோல மாவட்டம் முழுவதுமுள்ள, 1,404 குளம், குட்டைகளில், 175 மட்டுமே நிரம்பின.

