தனியார் மினி பஸ் டிரைவருடன் மோதல் ஆட்டோ ஓட்டுனர்கள் சாலை மறியல்
தனியார் மினி பஸ் டிரைவருடன் மோதல் ஆட்டோ ஓட்டுனர்கள் சாலை மறியல்
ADDED : செப் 27, 2026 03:37 AM
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளியில் செயல்பட்டு வரும் சிப்காட் தொழிற்பேட்-டைக்கு தினமும் ஆயிரக்
கணக்கான தொழிலாளர்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், சிப்காட் நோக்கி சென்ற தனியார் மினி பஸ்சின் ஓட்டுனர் ஒருவர், ஆட்டோவில் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது எனக்கூறி, பஸ்சை ஆட்டோவுக்கு குறுக்கே நிறுத்தி தகராறில் ஈடுபட்-டுள்ளார். ஆட்டோவில் இருந்த பயணிகளுடன் புகைப்படமும் எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர், தன் சக ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தகவல் அளித்தார். ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவரும் ஒன்றி-ணைந்து நேற்று மதியம், போச்சம்பள்ளியில், கல்லாவி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் கடந்த வாரம் கல்லுாரி பெண் போராசிரியர்களை ஆட்டோவில் அழைத்து சென்ற போதும், மினி பஸ் டிரைவர்கள் தகராறில் ஈடு-பட்டனர். ஆட்டோவே இயக்கக்கூடாது என்கிறார்களா எனக்-கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போச்சம்பள்ளி போலீசார், அவர்களை சமரசம் செய்து கலைத்தனர்.
இது போன்ற பிரச்னை தொடர்கதையாவதால், வட்டார போக்-குவரத்து அலுவலர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தலையிட்டு, இரு தரப்பையும் அழைத்து பேச்சு
வார்த்தை நடத்தி, தீர்வு காண, ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
