sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தானியங்கி பம்பு செட் கருவி மானிய விலையில் பெறலாம்

/

தானியங்கி பம்பு செட் கருவி மானிய விலையில் பெறலாம்

தானியங்கி பம்பு செட் கருவி மானிய விலையில் பெறலாம்

தானியங்கி பம்பு செட் கருவி மானிய விலையில் பெறலாம்


ADDED : ஜன 01, 2025 01:23 AM

Google News

ADDED : ஜன 01, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், ஜன. 1-

தானியங்கி பம்பு செட் கருவியை, மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை:

கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு, வேளாண் பொறியியல் துறை உருவாக்கிய மொபைல் மூலம் இயங்கும் தானியங்கி பம்பு செட் கருவி மானிய விலையில் வழங்கப்படுகிறது.

இதை பயன்படுத்தி விவசாய கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்பு செட்டுகளை, வீட்டில் இருந்த படியும், வெளியூர்களில் இருந்த படியும் இயக்கவும், நிறுத்தவும் முடியும். இதற்கு மானியமாக சிறு, குறு, பெண் விவசாயிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு கருவியின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக, 7,000 ரூபாய்- வரை மானியமாக வழங்கப்படும். மற்ற விவசாயிகளுக்கு மொத்த செலவில், 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக, 5,000 ரூபாய்- வரை மானியம் வழங்கப்படும். கரூர் மாவட்டத்தில் பொது பிரிவுக்கு, 152 கருவிகளும், ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் பிரிவுக்கு, ஐந்து கருவிகளும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் கரூர் மற்றும் குளித்தலை வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். இத்திட்டம் தொடர்பான விபரங்களை, வேளாண் பொறியியல் துறையின் செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், கரூர், மொபைல் எண், 9443156424) அல்லது வருவாய் கோட்ட அளவில் உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், கரூர், மொபைல் எண், 9443567583), குளித்தலை மொபைல் எண், 9443922630 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us