ADDED : ஆக 20, 2024 02:41 AM
கிருஷ்ணகிரி: ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி, கிருஷ்ணகிரி பழையபேட்டை ராகவேந்திரர் கோவிலில், நேற்று காலை, 6:30 மணிக்கு நடந்தது. இதில், ஆரிய வைஷ்ய சமூகத்தை சேர்ந்தவர்கள், சிறப்பு பூஜைகள் செய்து, காயத்ரி மந்திரங்களை சொல்லி, கணபதி ஹோமங்கள் நடத்தி தங்களின் பழைய பூணுாலை எடுத்து விட்டு புதிய பூணுாலை அணிந்து கொண்டனர். இதேபோல், காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஷ்வரமடம் சிவன் கோவிலில், வன்னிய குல ஷத்ரியர்கள் பூணுால் அணியும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ஜகத்குரு சங்கர மடத்தில், பிராமணர் நலச்சங்கம் சார்பில், ரிக், யஜூர் வேத உபாகர்மா நிகழ்ச்சி நடந்தது. காலை, 6:30 மணிக்கு, ரிக் வேத உபாகர்மாவும், 9:00 மணிக்கு, யஜூர் வேத உபாகர்மாவும், நடந்தது.
* ஊத்தங்கரை வாணியர் நல சங்கத்தின் சார்பில், ஆவணி அவிட்டம் என்னும் பூணுால் போடும் நிகழ்ச்சி, காசி விஸ்வநாதர் விசாலாம்பிகை கோவிலில் நடந்தது. நிகழ்ச்சியில் வாணியர் இன மக்கள் பூணுால் அணிந்தனர்.

