/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் அதியமான் கல்வி குழும அறங்காவலருக்கு விருது
/
ஓசூர் அதியமான் கல்வி குழும அறங்காவலருக்கு விருது
ADDED : ஆக 25, 2025 02:57 AM
ஓசூர்: கோவை லேமெரிடியன் ஓட்டலில், ஐ.சி.டி., அகாடமி சார்பில் நடந்த விழாவில், ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை செயலாளரும், அதியமான் கல்வி குழும அறங்கா-வலருமான லாசியா தம்பிதுரைக்கு, 'அடுத்த தலைமுறை கல்வி பயிற்சியாளர்' விருது வழங்கப்பட்டது. தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தியாகராஜன், லாசியா தம்பிதுரைக்கு அந்த விருதை வழங்கி கவுரவித்தார்.
வளர்ந்து வரும், நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு, கல்விச்சூழலை வடிவமைத்தது, கல்வித்துறையில் தொலைநோக்கு தலைமைத்துவம் ஆகியவற்றிற்காக இந்த விருது வழங்கப்பட்ட-தாக, விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். விருது பெற்ற லாசியா தம்பிதுரைக்கு, அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் ராதா
கிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., கல்லுாரி முதல்வர் முத்து
மணி, கல்விக்குழும துணைத்தலைவர் சுரேஷ்பாபு, புல முதன்-மையர் வெங்கடேஷ் செல்வம், மேலாளர் நாராயணன் மற்றும் அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.