/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குத்துச்சண்டை பயிற்சி பெற்ற 54 பேருக்கு சான்றிதழ் வழங்கல்
/
குத்துச்சண்டை பயிற்சி பெற்ற 54 பேருக்கு சான்றிதழ் வழங்கல்
குத்துச்சண்டை பயிற்சி பெற்ற 54 பேருக்கு சான்றிதழ் வழங்கல்
குத்துச்சண்டை பயிற்சி பெற்ற 54 பேருக்கு சான்றிதழ் வழங்கல்
ADDED : மே 30, 2024 07:13 AM
கிருஷ்ணகிரி : இலவச கோடை கால குத்துச் சண்டை பயிற்சி பெற்ற, 54 பேருக்கு, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், கடந்த ஏப்., 29 முதல் இம் மாதம், 25 வரை கோடை கால இலவச குத்துச்சண்டை பயிற்சி நடந்தது.
இதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 42 மாணவர்கள், 12 மாணவியர் என மொத்தம், 54 பேர் பயிற்சி பெற்றனர். குத்துச்சண்டை பயிற்சியாளர் முனிராசு, மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். பயிற்சி முடிந்து மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ராஜகோபால் வரவேற்றார். துணைத்தலைவர் கேப்டன் லக்ஷ்மணன், செயலாளர் முனிராசு, பொருளாளர் தீபக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியில் கலந்து கொண்ட, 54 பேருக்கும், மாவட்ட குத்துச்சண்டை சங்க தலைவர் ஏகம்பவாணன், பதக்கங்களை அணிவித்து, சான்றிதழ்களை வழங்கி பேசினார்.