/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பள்ளி மாணவர்களுக்கு பனை விதை,மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு
/
பள்ளி மாணவர்களுக்கு பனை விதை,மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு
பள்ளி மாணவர்களுக்கு பனை விதை,மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு
பள்ளி மாணவர்களுக்கு பனை விதை,மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு
ADDED : ஏப் 26, 2025 01:37 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, ஜாகிர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஓசூர் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் திவ்யா டிரக் ஹவுஸ் நிறுவனம் சார்பில், பனை விதை வழங்குதல், மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் சுதாராணி தலைமை வகித்தார். திவ்யா டிரக் ஹவுஸ் நிறுவனத்தை சேர்ந்த சரண்யா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. ஒரு முறை மட்டும் பயன்படுத்தும், பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இந்த பூமியை பாதுகாக்க சுற்றுச்சூழலை மேம்பாடு அடைய செய்ய வேண்டும். துாய்மையான காற்றை பெற அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு வைக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பேப்பர் மற்றும் மஞ்சப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் அவர்களுக்கு பனை விதைகள், மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன.
பசுமை படை ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா, கணித ஆசிரியர் விஜய் உள்பட பலர் பங்கேற்றனர்.

