/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு
/
தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு
ADDED : அக் 16, 2024 12:59 AM
தகவல் அறியும் உரிமை சட்ட
விழிப்புணர்வு
ஊத்தங்கரை, அக். 16-
ஊத்தங்கரை, அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், அனைத்து துறை மாணவ, மாணவியருக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய விழிப்புணர்வு வாரவிழா நிகழ்ச்சி நடந்தது. ஊத்தங்கரை வழக்கறிஞர்கள் பிரபாவதி மற்றும் திலகா ஆகியோர் மாணவ, மாணவியருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், தகவல்களை சேகரிக்கும் முறைகள், விண்ணப்பிக்கும் முறைகள் பற்றி எடுத்துரைத்தனர். நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் விஜயன் தலைமையேற்றார். ஆங்கில விரிவுரையாளர் சக்திவேல் வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இயந்திரவியல் விரிவுரையாளர் மணிகண்டன் செய்திருந்தார். வேதியியல் விரிவுரையாளர் லோகேஷ் குமார் நன்றி கூறினார்.