/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேர் உட்பூசணம் குறித்து மாணவியர் விழிப்புணர்வு
/
வேர் உட்பூசணம் குறித்து மாணவியர் விழிப்புணர்வு
ADDED : டிச 20, 2025 07:05 AM
கிருஷ்ணகிரி: திருச்சி வேளாண் கல்லுாரி மாணவியர், கிருஷ்ணகிரியில், வேர் உட்பூசணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருச்சி மகளிர் தோட்டக்கலைக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலை-யத்தில், நான்காம் ஆண்டு இளநிலை படிக்கும் மாணவியர், ஊரக தோட்டக்கலை பணி அனுபவத்திற்காக, 45 நாட்கள், கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இம்மாணவியர், கிருஷ்ணகிரி அடுத்த எலு-மிச்சங்கிரி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில், தலைவர் மற்றும் பேராசிரியர் சுந்தர்ராஜ் மற்றும் காவேரிப்பட்டணம் தோட்டக்-கலை உதவி இயக்குனர் சரவணன் ஆகியோர் தலைமையில் நடந்த இயற்கை விவசாயிகள் கூட்டத்தில், வேர் உட்பூசணம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில், வேர் உட்பூசணம் என்பது ஒரு நன்மை பயக்கும் மண் பூஞ்சையாகும். இது தவிர வேர்களுடன் ஒரு கூட்டு வாழ்வு இணைப்பை உருவாக்குகிறது. அவை ஊட்டச்சத்துக்களை குறிப்-பாக பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் தண்ணீரை சிறப்பாக உறிஞ்ச உதவுகிறது. பயிர்களின் வேர் அமைப்பை விரிவுப்படுத்-துகிறது. மண்ணில் உள்ள நோய்க்கிருமிகள் மற்றும் நுாற்புழுக்-களில் இருந்து பயிர்களை பாதுகாக்கிறது என்று விளக்கம் அளித்-தனர்.

