/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.100 கோடி வருவாய் போச்சு: ஓசூர் தி.மு.க., கவுன்சிலர் புகார்
/
ரூ.100 கோடி வருவாய் போச்சு: ஓசூர் தி.மு.க., கவுன்சிலர் புகார்
ரூ.100 கோடி வருவாய் போச்சு: ஓசூர் தி.மு.க., கவுன்சிலர் புகார்
ரூ.100 கோடி வருவாய் போச்சு: ஓசூர் தி.மு.க., கவுன்சிலர் புகார்
ADDED : டிச 20, 2025 05:32 AM

ஓசூர்: ஓசூர் மாநகராட்சியில், 100 கோடி ரூபாய் வரி வருவாய் வசூல் செய்ய முடியும் என்ற போதும், அதிகாரிகள் கவனம் செலுத்தாமல் இருப்பதாக, தி.மு.க., கவுன்சிலர் குற்றஞ்சாட்டினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி கூட்டம், தி.மு.க.,வை சேர்ந்த மேயர் சத்யா தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம், துணை மேயர் ஆனந்தய்யா, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 22வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மாதேஸ்வரன் பேசுகையில், ''டி.வி.எஸ்., நிறுவனத்தின், 30 லட்சம் சதுரடி கட்டடத்திற்கு சொத்து வரி விதிக்கவில்லை. புதிதாக, 10,000 சதுரடியில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதற்கும் வரி விதிக்கவில்லை. இந்த ஒரு நிறுவனத்தால் மட்டும் ஆண்டுக்கு, 1.50 கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதுபோல், பல நிறுவனங்களுக்கு வரி விதிக்காமல் உள்ளனர்.
''இன்னும், 100 கோடி ரூபாய் அளவிற்கு வரி விதிக்கலாம். ஆனால், அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை. மேயர், கமிஷனர் கண்டுகொள்வதில்லை. சொத்து வரி ரசீது இல்லாமல், லஞ்சம் கொடுத்தாலே மின் இணைப்பு வழங்குகின்றனர். இன்னும் நமக்கு பதவிக்காலம், 12 பவுர்ணமி மட்டும் தான் உள்ளது,'' என்றார்.
மேயர் சத்யா, ''மறு ஆய்வு செய்து வரி விதிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

