/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் விழிப்புணர்வு
/
அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் விழிப்புணர்வு
அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் விழிப்புணர்வு
அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் விழிப்புணர்வு
ADDED : மார் 16, 2024 07:34 AM
கிருஷ்ணகிரி : தேர்ப்பட்டி அரசு பள்ளியில், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தி, ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த தேர்ப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், கடந்த மாதம் தனியார் அமைப்பு உதவியுடன் விளையாட்டு வழிக்கல்வி மையத்தை கலெக்டர் சரயு துவக்கி வைத்தார்.
இந்த கல்வி மையத்தில் 27 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இங்கு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டுமென சி.இ.ஓ., மகேஸ்வர் கூறினார். இதையடுத்து பட்டதாரி ஆசிரியர் விமல்நாதன், இடைநிலை ஆசிரியர்கள் செல்வி, லட்சுமணன், விளையாட்டு வழிக்கல்வி மைய ஆசிரியர் நளினி ஆகியோர் காந்தி நகர் காலனி, பழையரோடு, தென்பெண்ணை நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று, குழந்தைகளை தேர்ப்பட்டி அரசுப்பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., சேருங்கள் எனக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்புமாறும் பெற்றோர்களுக்கு வலியுறுத்தினர்.

