ADDED : அக் 02, 2026 02:18 AM

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட் டம், ஊத்தங்கரை சார்பு நீதிமன்றம் சார்பில் சமரச மையம் மற்றும் மாவட்ட நீதிமன்றம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. ஊத்தங்கரை சார்பு நீதி-மன்ற நீதிபதி திருஞானசம்பந்தம் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். ஊத்தங்கரை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சந்திரசேகரன், செயலாளர் வடிவேல், மற்றும் மூத்த வழக்கறி-ஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்ட பேரணி, ஊத்தங்-கரை நீதிமன்ற வளாகத்தில் தொடங்கி, கிருஷ்ணகிரி மெயின் ரோடு வழியாக, ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பு வரை ஊர்வ-லமாக சென்றது.
பேரணியில் சார்பு மையம் சார்பில், வாரத்தின், 7 நாட்களும் மாவட்ட மற்றும் வட்ட நீதிமன்றங்கள் செயல்படும் என்றும், நேரடியாகவோ அல்லது இணைய வாயிலாகவோ சமரசம் செய்ய நாடலாம், தேசிய அளவில் நடக்கும் சிறப்பு சமரச முகாமில் பொதுமக்கள், 90 நாட்களும் பயன்படுத்தி கொள்ளலாம், நிலு-வையிலுள்ள தங்கள் வழக்குகளை நேரடியாகவோ அல்லது தங்கள் வழக்கறிஞர் மூலமாகவோ, சமரச மையத்தை அணு-கலாம் போன்ற சமரச தீர்வு காண நடவடிக்கைகளை, துண்டு பிரசு-ரங்களாக கொடுத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதேபோல், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் நடந்தது.
